காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்
காவிரி நதி நீர் விவகாரம் :
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை நாள்தோறும் ஒரு டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.
அத்துடன் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்க வேண்டும் என கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடக அரசு கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் :
இதனையடுத்து காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்ய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் பங்கேற்கின்றனர்.
மேலும் காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தபட்டால் தான் காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடக அரசிற்கும் மற்றவர்களுக்கும் உணர்த்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர் !
டி.கே.சிவக்குமார் கருத்து :
காவிரி நதி நீர் விவகாரத்தில் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், அத்துடன் தமிழகத்தலைவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் சமமாக பயனடையும், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மேகதாது அணைக்கு தமிழ்நாடு அரசு பச்சைக்கொடி காட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.