தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 ! 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் தமிழ்நாடு அரசு திருவான்மியூர் தொழிற்பயிற்சி நிலையம் மாணவர்சேர்க்கை 2024 நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவ / மாணவியர் சேர்க்கையானது வரும் 15.07.2024 அன்று வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்

Electrician,

Electronics Mechanic,

Computer Operator & Programming Assistant,

Technician Medical Electronics

போன்ற நான்கு தொழிற்பிரிவுகளை பயிற்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியுற்ற மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

இந்த தொழிற்பயிற்சியில் சேர விரும்பு மாணவ / மாணவியர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் அமைத்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருவான்மியூரை நேரடியாக அணுகி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01.07.2024

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2024

தமிழ்நாடு நாள் விழா 2024 – பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிப்பு !

பயிற்சியில் சேரும் அனைவருக்கும் கட்டணமில்லா பயிற்சி, மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.750 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பயிற்சியில் சேரும் மாணவிகளுக்கு அரசு அறிவித்துள்ள மகளிருக்கான ஊக்கத்தொகை ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் மிதிவண்டி, பாடப்புத்தகம், இலவச பேருந்து சலுகை, சீருடைகள், வரைபடக்கருவி போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : 720003262, 9444247028, 8939646933

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *