தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா? என்பது குறித்து, பதவிக்காலம் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பா?
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆளுநர் ஆர்.என்.ரவி :
நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி இருந்த நிலையில் அதன் பிறகு தமிழக ஆளுநராக 2021 ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து இவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அந்த வகையில் இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதுச்சேரி, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு புதிய ஆளுநர்கள் நிமயிக்கப்பட்டனர். அப்போது தமிழக ஆளுநர் நியமனம் தொடர்பான எந்த வித அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே ரவியே தமிழக ஆளுநராக தொடர்வார் எனக் கூறப்படுகிறது.
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை – உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !
ஆளுநராக நீடிக்க வாய்ப்பு :
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. மேலும் நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.