தமிழக ஓட்டுநர் உரிமம்
பொதுவாக 18 வயது நிரம்பியவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் 18 வயது ஆவதற்குள் வாகனம் ஓட்ட கற்று கொள்கிறார்கள். இடையில் காவல்துறையிடம் மாட்டி அபராதம் கட்டுகிறார்கள். இதனால் இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் பெற முனைப்புடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தவர்கள் இனிமேல் ஆர்டிஓ ஆபிஸிற்கு சென்று வாங்க முடியாது. இன்று முதல் தபால் மூலம் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே எக்காரணத்தை கொண்டும் அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் கொடுத்த வீட்டு முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் உள்ளிட்டவை அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களின் தொலைபேசி எண், முகவரி தவறாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு திரும்ப வந்துவிடும் என்றும் சரியான விவரங்களை கொடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மக்கள் கூட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.