Breaking News: தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்: குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு தினங்களில் குடியரசு தலைவரின் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்., அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்
இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரின் விருதுகளானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. independence day
அதன்படி, ஐஜி பாபு, ஐஜி கண்ணன், ஆணையர் பிரவீன் குமார் அபினபு, எஸ் பி ஃபெரோஸ்கான், எஸ்.பி பிரபாகர், எஸ்.பி சுரேஷ்குமார், எஸ்.பி கிங்ஸ்லின், எஸ்.பி பாலாஜி சரவணன், எஸ்.பி சியாமளா தேவி, ஏஎஸ்பிக்கள் ராதாகிருஷ்ணன், ஸ்டீபன், டிஎஸ்பிக்கள் டில்லி பாபு , மனோகரன், ஆய்வாளர்கள் சந்திரசேகர், சந்திரமோஜன், ஹரிபாபு, தமிழ்ச்செல்வி மற்றும் 3 எஸ்ஐக்கள் உள்ளிட்டோருக்கு அதிகாரபூர்வமாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. tamilnadu 23 police officers
Also Read: இந்தியாவில் இனி பெண்கள் மீதும் போக்சோ சட்டம் பாயும் – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதே போல் மத்திய உள்துறைக்கான சிறப்பு விருது தமிழ்நாட்டை சேர்ந்த கம்பெனி கமாண்டர் மூர்த்தி, பிளாட்டூர் கமாண்டர் 3 கலையழகன், ஏரியா கமாண்டர் பிளாட்பின் என்ற 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. guards presidents medal
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்