தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… குடை ரொம்ப முக்கியம் பிகிலு?தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… குடை ரொம்ப முக்கியம் பிகிலு?

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (07.06.2024) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

அதுமட்டுமின்றி நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், அரியலூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி,  பெரம்பலூர்,  திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை – weather report news in tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *