தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா. தற்போது நடைபெற்று முடிந்த 18 வது மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நோட்டாவுக்கு அதிக வாக்குகள் :
சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை பிடிக்காதவர்கள், எந்தவொரு கட்சிக்கும் வாக்காளிக்காமல் நோட்டாவுக்கு வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகள் நோட்டாவுக்கும், குறைந்தபட்ச ஓட்டாக கன்னியாகுமரியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளும் நோட்டாவுக்கு போடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு – யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !
மேலும் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளிலும், அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்களுக்கு போட்டியாக நோட்டாவுக்கும் வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாக்குகள் வரை நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. இது மக்கள் அரசியல் கட்சிகள்மீது வைத்துள்ள வெறுப்பை சுட்டிக்காட்டுகிறது .