தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ! 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ! 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளர் நியமனம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை. தற்போது இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இந்திய முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு முடிவடைந்தது. தற்போது பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் ஆகியவை அந்தந்த தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்புடன் வேட்பாளர்களின் முகவர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் – சுற்றுலா பயணிகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி !

அந்த வகையில் தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதில் 39 தொகுதிகளுக்கு 57 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *