
‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி சினிமா தியேட்டர்கள் மூடல் குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடல் – திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றது.
மேலும் இந்த ‘ஃபெஞ்சல்’ புயல் இன்று (நவம்பர் 30) மதியம் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தற்போது நாளை (டிசம்பர் 1) கரையைக் கடக்கும் என்று தற்போது தெரிவித்துள்ளது. மேலும் புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!
இந்நிலையில் புயல் எதிரொலி காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் அனைத்து திரையரங்குகள் மூடப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, முன்பதிவு டிக்கெட்டுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்