புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களில், தகுதியான மக்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ரேஷன் கார்டு – மகளிர் உரிமை தொகை
தமிழகத்தில் வாழும் மக்களின் அத்தியாவசிய பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியம். அதற்கு மட்டுமின்றி அரசு கொண்டு வரும் திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகையை பெற ரேஷன் கார்டு தேவைப்படுவதால் மக்கள் அனைவரும் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ரேஷன் கார்டுகள் விநியோகம் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நடந்ததால் ரேஷன் கார்டுகள் விநியோக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தேர்தல் பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது.
Also Read: 471 நாட்களுக்கு பின் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி புதிய ரேஷன் கார்டு மக்களுக்கு கிடைத்தால், தகுதியான விண்ணப்பதாரர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெய்யில் கலப்படம் செய்தது உறுதி – கேரளாவில் 3 நிறுவனங்களுக்கு தடை
இலவச தையல் இயந்திரம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா