Home » செய்திகள் » தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கனமழை குறைந்து வருகிறது. இருந்தாலும்  ஓரிரு இடங்களிலும் மிதமான கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று (22-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுமட்டுமின்றி, காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும் தமிழகம் மட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜனவரி 23) முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆக காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வானிலை மாற்றத்தால் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

இனி பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 9.., நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம்!!!

மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு.., பிப்ரவரி 11ம் தேதி வரை தான் டைம்?.., விண்ணப்பிப்பது எப்படி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top