Breaking News: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஒரு சில முக்கிய மாவட்டங்களிலும் , புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் உள்ளிட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுமட்டுமின்றி சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் கரு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Also read: OLA நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த நபர் – ₹1.94 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!!
மேலும் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மதுரை நாதக கட்சி நிர்வாகி கொலை வழக்கு – 4 பேர் அதிரடி கைது
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம்
கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் தங்கம் விலை