
Breaking News: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம்: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம்

Also Read: பெற்றோர் மாமனார் மாமியாரை பார்த்துக்கொள்ள சிறப்பு விடுமுறை – அசாம் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
மேலும் சென்னையை பொறுத்தவரை 24 மணி நேரமும் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இன்று மாலை இரவு நேரங்களில் கனமழை பெய்யக்கூடும். அதுமட்டுமின்றி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் கடலோர இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது