தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில்
ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது எனவும் அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றியமைக்க வேண்டும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை :
தமிழகத்தில் பெய்த கோடை மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் தற்போது 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சரியான முடிவாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்த புதுச்சேரி அரசு :
புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனை போன்று தமிழ்நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு,
50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, வரும் ஜூன் 21 ஆம் தேதி தான் திறக்கப்பட உள்ளன.
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !
அவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் மட்டும் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது.
கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.