2024 மக்களவை தேர்தல்., கணக்கிடப்படாத 18 கோடி தங்க நகைகள் பறிமுதல்.., மதுரையில் பரபரப்பு!!

தங்க நகைகள் பறிமுதல்

மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 702 க்கும் மேலான பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 18 கோடி மதிப்புள்ள நகைகள்  பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் மற்றும் நகைகள், பொருட்கள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றால், அதற்கான  ஆவணங்கள் வைத்திருப்பது மிகவும் அவசியம், அப்படி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் அல்லது நகைகள் மற்றும் பொருட்கள் எடுத்து சென்றால், பறக்கும் படைகள் வீடியோ பதிவுடன் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் 18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நகைகள் திருச்சி கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

வெடிகுண்டு மிரட்டல்.., பிரதமர் மோடி வருகையின் போது இப்படியொரு சம்பவமா?.., அதிரடி சோதனையில் காவல்துறை!!

Leave a Comment