அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க தடை: தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பயணச்சீட்டு வாங்காமல் இலவச பயணமே மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அவர்கள் பணியில் இருக்கும் பொழுது மட்டுமின்றி தங்களது சொந்த பணிகளை நிறைவேற்ற விடுமுறை நாட்களிலும் இலவச பயணத்தை தான் மேற்கொள்கிறார்கள். இதற்கிடையில் பேருந்து நடத்துனர்கள் கட்டணம் கேட்டால் இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதமே ஏற்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் நெல்லை நாங்குநேரி அருகே ஒரு காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” காவலர்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி இல்லை. போலீசிடம் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும். எனவே மற்ற நேரங்களில் கண்டிப்பாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும். நாங்குநேரியில் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் காவலர்கள் கட்டணமில்லாமல் பயணிக்க தடை- Today news in tamilnadu, Tamilnadu Latest News, Tamilnadu Politics News – tamilnadu police news – tamilnadu transport news
தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் – கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
உதகை மலை ரயில் சேவை இன்று தொடக்கம்