தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் வருகிற நிதி தான் பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. அதன்படி தினசரி அந்த கடைகளில் 100 முதல் 120 கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது.
ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.., சோகத்தில் மதுபிரியர்கள்!!
அதுமட்டுமின்றி, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகை என்றால் போதும் பெரிய நடிகர்களின் படத்தின் வசூலை விட அதிகமாக, 200 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையாகி வருகிறது. மேலும் மற்ற துறைகளில் விடுமுறை என்பது உண்டு. ஆனால், புயலே வந்தாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதில்லை. இருப்பினும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஜன 4) வெடி விபத்து.., 6 பேர் உயிரிழப்பு!!
அவ்வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை திருவள்ளூர் தினம் வருகிறது. எனவே அந்நாளில் தமிழகத்தில் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த நாளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு நாட்களில் அரசின் உத்தரவை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் அனுமதி.., என்ன ஆச்சு?.., அடுத்த கேப்டன் யார்?
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன்.., ஒரு லட்சம் பிணைத்தொகை!!
2025 ஜனவரிக்குள் தவெக நிர்வாகிகள் நியமனம்.., பக்காவா காயை நகர்த்தும் தலைவர் விஜய்!!
பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து UKG மாணவி உயிரிழப்பு.., விக்கிரவாண்டியில் பரபரப்பு!!
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!