தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி அளவுகளில் சரக்கு பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தொடர்ந்து மது விலக்கு வேண்டும் என்று மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பொழுது வரை அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் சரி ,முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் அல்லது இறந்த நாள் அன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அந்த நல்ல நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Also Read: பிரதமர் உருவத்தை சித்தரித்து சாதனை படைத்த மாணவி – அதுவும் 800 கிலோ தானியங்கள் வைத்தா?
அதுமட்டுமின்றி மதுபான பார்கள், கிளப் சார்ந்த பார்கள் செயல்பட தடை என்று சென்னை ஆட்சியர் ஜகடே உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் இயக்கப்பட்டால் கடையின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.
தூக்கிலிடும் முன் கைதி காதில் சொல்லப்படும் வார்த்தை என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக்கு போதையில் வந்த மாணவி – கடைசியில் நேர்ந்த டிவிஸ்ட்!
திண்டுக்கல்லில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி