கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மருத்துவ துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சார்பில் கடந்த 25 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் :
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சார்பில் கடந்த 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் நாட்டிலேயே தமிழ்நாடு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக கல்லீரல் மருத்துவத்துறை இயக்குநர் கே.பிரேம்குமார் கூறுகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 11 வது முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை எடுத்துக்கொண்ட அனைவரும் தொடர் மருத்துவ கண்காணிப்புடன் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு ! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் !
மேலும் தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சுமார் ரூ.35 லட்சம் வரை செலவாகும் என்றும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கட்டணமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.