Breaking News: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை பிடித்து முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்த நிலையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். அதில் ஒரு திட்டம் தான் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இதன் மூலம் பல லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் ஆண்களுக்கும் இலவச பயணம் திட்டம் கொண்டு வர போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு
அதாவது தமிழ்நாட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே பெரும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. அதன் பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. tamil nadu transport department
ஆனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதற்கு ஏற்ப பேருந்து பயணச்சீட்டு கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான ஆணையம் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Also Read: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளர் யார்? வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்தநிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. அதாவது தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்துவது தொடர்பாக அரசாங்கம் சார்பாக எந்த ஒரு கருத்தும் அறிக்கையும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்