நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுந்துவிட்டு எரியும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வானிலை மையம் :
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் 100 டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் வெப்ப நிலை உயர்ந்து காணப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதுமட்டுமின்றி, இன்று முதல் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சென்னையை பொறுத்தவரை வானிலை மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் வானிலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல எந்த தடையும் இல்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.