தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2024 - விண்ணப்பிக்க செப்.19 தான் கடைசி - எல்லா மாணவர்களும் Apply பண்ணலாம்!தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2024 - விண்ணப்பிக்க செப்.19 தான் கடைசி - எல்லா மாணவர்களும் Apply பண்ணலாம்!

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2024: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக அடுத்தடுத்து புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு  நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2024

அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் அரசு சார்பாக வழங்கப்படும். மேலும் இந்த தேர்வை தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில்  பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் தான் எழுதலாம். மேலும் இந்த தேர்வின் மூலம் பள்ளிக்‌ கல்வித்‌ துறை 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். tamil talent search examination 2024

இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்கான தேர்வு வருகிற அக்டோபர் 19ம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ttse exam 2024

விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்த தேர்வை எழுத விரும்பும் பிளஸ் 1 மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் செல்ல வேண்டும்.
  • உள்ளே சென்றவுடன் அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் https://tnegadge.s3.amazonaws.com/notification/TTSE/1725518833.pdf என்ற பக்கத்தை நேரடியாகவே க்ளிக் செய்து கொள்ளலாம்.
  • இதையடுத்து அதில் இருக்கும்  விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.  
  • பின்னர் அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் முதல்வரிடம் தேர்வுக் கட்டண தொகை ரூ.50/- சேர்த்து ஒப்படைக்க வேண்டும்.
  • விண்ணப்பம் சமர்ப்பிக்க வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி கடைசி நாள் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளலாம். ttse exam 2024

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு

PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்

குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *