தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுக விழா - பனையூரில் கொடிக்கம்பம் ரெடி - 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ப்பு !தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுக விழா - பனையூரில் கொடிக்கம்பம் ரெடி - 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ப்பு !

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி அறிமுக விழா வை தொடர்ந்து பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொடிக்கம்பம் நடும் பணி நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இளையதளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினர். மேலும் அந்த கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை வரும் ஆகஸ்ட் 22ம் தேதி விஜய் அறிமுகப்படுத்த உள்ள நிலையில் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடிக்கம்பம் நடும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரியில் இருந்து சுமார் 300 நிர்வாகிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழாவிற்காக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விரதம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களே குட் நியூஸ் – ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

இவ்வாறு கட்சி கொடி அறிமுக விழாவை தொடந்து அடுத்த மாதம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *