தமிழகத்தில் கிட்டத்தட்ட 4500 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மது விலக்கு கேட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அரசு கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறது. கடந்த ஆண்டு கூட 500 டாஸ்மாக் கடைகளை அதிரடியாக மூடப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மது பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது தமிழகத்தில் நாளை தைப்பூசம், நாளை மறுநாள் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறி கள்ள சந்தையில் மது விற்க பட்டாலோ, அல்லது கடையை திறந்து வியாபாரம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட மது பிரியர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.