தமிழிசை சௌந்தரராஜன்
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சமீபத்தில் தமிழிசை சௌந்தரராஜன், தனது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார். தற்போது மீண்டும் முழுநேர அரசியலில் இறங்கிய அவர் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இருப்பினும் அவர் ஏன் பதவியை ராஜினாமா செய்தார் என்று பலரும் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” என் அன்பான மக்களுக்கு வணக்கம், நான் தற்போது எங்கு சென்றாலும் கேட்கும் ஒரே கேள்வி என்னவென்றால் நான் ஏன் ராஜினாமா செய்தேன்? என்று தான்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். நான் பாஜகவில் சேர்ந்து கிட்டத்தட்ட 28 வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு எல்லா பொறுப்புகளையும் பாஜக கொடுத்துள்ளது. இரண்டு முறை பிரதமராக இருக்கும் மோடி ,மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நானும் துணை நிற்க விரும்பியதால் தான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்த நான்… உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன்…. விரும்பி வந்திருக்கின்றேன்…. வெற்றியை தாருங்கள்…. உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.