
தமிழ்நாடு 10th மற்றும் 12th பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?தமிழகத்தில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கி 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. அதே போல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பொழுது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 10ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.