தமிழகத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இன்று பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தேர்வில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சொல்லப்போனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.11 லட்சம் பேரில் 7.39 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4.04 லட்சம் பேரும், மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நடந்து முடிந்த +1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்படும் துணை தேர்வு எப்போது ஆரம்பிக்கும் என்பதை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வில் தேர்ச்சி பெறாத +1 மாணவர்களுக்கு வருகிற ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத் தேர்வு தொடங்கும் என்றும் இதற்காக மாணவர்கள் மே 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை 2024