தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துள்ள நிலையில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பநிலை இருந்து வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மக்களின் சூட்டை தணிக்கும் விதமாக கோடை மழை சில பகுதிகளில் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவள்ளூர், ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் உள்ளனர்.
2024 பொறியியல் படிப்புக்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் – விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு