தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேர்வு முடிந்ததும் அடுத்த பணியாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை பேப்பர் திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்றுள்ள நிலையில் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த மே 6(இன்று) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
நடந்து முடிந்த இந்த தேர்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tnresults.nic.in என்ற தளத்திலும், www.dge.tn.gov.in தளத்திலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி மாணவிகள் 4.07% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் நடப்பாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கிட்டத்தட்ட 97.45 % தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதே போல் 90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு.