பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வேதியியல் பாடத்தில் கருணை மதிப்பெண் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கருணை மதிப்பெண்
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான 2023 – 2024 ஆண்டிற்கான பொது தேர்வுகள் கடந்த மாதம் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது பேப்பர் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் மும்மரமாக இருந்து வருகின்றனர். மேலும் இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. தமிழகத்தில் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை விடைக்குறிப்புகளை வழங்கி இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் வேதியியல் பாடத்தில் கருணை மதிப்பெண் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது வேதியல் தேர்வின் போது வினாத்தாளில் 3 மதிப்பெண் பகுதியிலுள்ள 33 வது கேள்வி பிழையாக இருந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த கேள்விக்கு பதிலளித்த மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மூன்று மதிப்பெண்கள் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 12 வகுப்பு மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கான ரிசல்ட் அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.