தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர்: தமிழகத்தில் கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர்
இதனாலே டாஸ்மாக் கடைகளில் தினசரி கூட்டம் அள்ளும். அதே போல் பண்டிகை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வருகிற அக்டோபர் 31 ம் தேதி தீபாவளி பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.
அந்த நாளில் மது வியாபாரம் அதிகமாக காணப்படும். மேலும் மதுபிரியர்களின் வசதிக்காக கடைகளில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்தவும் தற்போது ஆலோசனை நடந்துள்ளது.
தீபாவளி பண்டிகை 2024 – அக்டோபர் 31ல் மழை பெய்யுமா? வானிலை மையம் தகவல்!
இந்நிலையில் தீபாவளி கூட்டத்தை சமாளிக்கும் விதமாக கூடுதல் பணியாளர்களை உதவிக்கு வைத்துக் கொள்வது குறித்து கடை விற்பனையாளர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்தது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தான் ரூ.53 கோடிக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?