Breaking News: தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் சட்ட-ஒழுங்கு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது முக்கிய நகரங்களைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். police
தமிழகத்தில் 9 டிஎஸ்பி அதிகாரிகள் பணியிட மாற்றம்
பணியிட மாற்றம் விவரங்கள்:
- தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பொறுப்பேற்றுள்ளார்.
- அதே போல் தமிழ்நாடு காவல் அகாடமி துணை காவல் கண்காணிப்பாளராக யாஸ்மின் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இதனை தொடர்ந்து ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக பிரீத்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இதையடுத்து மேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். transfer
Also Read: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு – என்ன காரணம் தெரியுமா?
- மேலும் ஊமச்சிக்குளம் துணை காவல் கண்காணிப்பாளராக பாலசுந்தரம் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
- சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக குத்தாலிங்கம் என்பவர் நியமனம்
- தாம்பரம் மணிமங்கலம் சரக உதவி காவல் ஆணையராக இளஞ்செழியன் பணியிட மாற்றம்
- ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக ராஜபாண்டியன் பணியிட மாற்றம் dsp police
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா
தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது?
சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல்