பொதுவாக ஏதேனும் விசேஷ பண்டிகை நாட்களில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட கூடுதலாக பேருந்துகள் விடப்பட்டு தமிழக போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் வருகிற ஜனவரி 25ம் தேதி முருகப்பெருமானின் உகந்த நாளான தை பூசம் திருவிழா நடைபெற இருக்கிறது. எனவே சென்னையில் இருந்து எக்கசக்க மக்கள் பழனி மற்றும் திருவண்ணாமலை ஊர்களுக்கு செல்வார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அவர்களின் பயணத்திற்கு எந்த ஒரு சிரமும் ஏற்பட கூடாது என்பதற்காக ஜனவரி 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து மதுரை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல நாளொன்றுக்கு கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் மீண்டும் தங்கள்து சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வர ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நள்ளிரவு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.