தமிழக அரசு சார்பில் ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024. தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற அம்மன் கோவிலுக்கு இலவச ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் . இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் வருகிற 17 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024
1000 பக்தர்கள்:
இந்து சமய அறநிலையத்துறை 2024-25 ம் ஆண்டிற்கான இலவச ஆன்மீக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வருகிற ஆடி மாதம் புகழ் பெற்ற அம்மன் கோவிலுக்கும், புரட்டாசி மாதம் வைணவ கோவில்களுக்கும் அழைத்து செல்ல இருக்கிறது. இதில் சுமார் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட 1000 மூத்தகுடி பக்தர்கள் அழைத்து செல்லப்பட இருக்கின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
புகழ் பெற்ற அம்மன் கோவில்கள்:
இந்த ஆன்மீக சுற்றுலாவில் செல்லவிருக்கும் தமிழக மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அம்மன் கோவில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை பயண திட்டம் :
மயிலாப்பூர் கற்பகம்மாள் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயண திட்டம்.
தஞ்சை பயண திட்டம்:
தஞ்சை பெரிய கோவில், வராகியம்மன் கோவில், தஞ்சை காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருக்கருகாவூர், கர்ப்பகரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில்.
கோவை பயண திட்டம்:
கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், கோவை தண்டுமாரியம்மன் கோவில்.
திருச்சி பயண திட்டம்:
உறையூர் வெக்காளியம்மன் கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், சமயபுரம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில்.
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா 2024 ! அன்னையின் வரலாறு மற்றும் திருத்தலத்தின் சுவாரஸ்யமான தகவல் !
மதுரை பயண திட்டம்:
மீனாட்சி அம்மன் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர் கோவில், ராக்காயி அம்மன் கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோவில்.
நெல்லை பயண திட்டம்:
கன்னியாகுமாரி பகவதியம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் ஒன்னு விட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், குழித்துறை சாமுண்டியம்மன் கோவில்.
விண்ணப்பிக்க:
ஆடி மாத ஆன்மீக சுற்றுலா 4 கட்டங்களாக அந்தந்த மண்டலங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதன்படி ஜூலை மாதம் 19 மற்றும் 26 ந் தேதி & ஆகஸ்ட் மாதத்தில் 2 ந் தேதி மற்றும் 9 ந் தேதி ஆகிய நாட்களில் சுற்றுலா அழைத்து செல்ல பட இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் முதியவர்கள் இந்து சமயத்தை சாரந்தவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறை இணையதளமான www.hrce.tn.gov.in -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து வருகிற 17 ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரில் சென்றும் பெற்று கொள்ளலாம்.
தொடர்பு எண்கள்:
மேலும் இது தொடர்பான விவரங்கள் அரிய கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்து சமய அறநிலைய துறை – 1800 4253 1111
சென்னை – 044- 29520937
தஞ்சாவூர் – 0436- 2238114
கோவை – 0422- 2244335
திருச்சி – 0431- 2232334
மதுரை – 0452- 2346445
நெல்லை – 0462-2572783