தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

   தமிழகத்தில் வேளாண்மை பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் பகுதியை தலைமை இடமாகக்கொண்டு 1971ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகள் தற்போது வரையில் இயங்கி வருகின்றது. அதன்படி இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023ன் படி காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நிரப்ப இருக்கின்றனர். எனவே பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் ஏற்பதாக பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

   1. Senior Research Fellow ( மூத்த ஆராய்ச்சியாளர் )

   2. Junior Research Fellow ( ஜூனியர் ஆராய்ச்சியாளர் )

   3. Research Associate ( ஆராய்ச்சி அசோசியேட் ) போன்ற பணியிடங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   1. Senior Research Fellow – 9

   2. Junior Research Fellow – 1

   3. Research Associate – 7 என மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் பல்கலைக்கழகத்தில் காலியாக இருப்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே ! 

கல்வித்தகுதி :

   விவசாயம் , தோட்டக்கலை , நுண்ணுயிரியல் , உயிரி தொழில்நுட்பம் , மண் அறிவியல் , வேளாண் வேதியியல் போன்ற துறையில் பி.எஸ்சி / எம்.எஸ்சி / பி.டெக் / எம்.டெக் / PhD படித்தவர்கள் NET தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுத்தகுதி :

   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயதுத்தகுதி குறிப்பிடப்படவில்லை.

சம்பளம் :

   1. Senior Research Fellow – ரூ. 25,000 முதல் ரூ. 37,000 வரையில் 

   2. Junior Research Fellow – ரூ. 32,000 முதல் ரூ. 49,000 வரையில் 

   3. Research Associate – ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை  :

   இப்பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவை இல்லை. தகுதியான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டால் போதுமானது. 

OFFICIAL NOTIFICATION DOWNLOAD 

  தேர்ந்தெடுக்கும் முறை :

   நேர்காணல் மூலம் காலியாக இருக்கும் ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் :

   நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் விண்ணப்பக்கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.

நேர்காணல் நடைபெறும் இடம் :

   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ,

   லாலிசாலை ,

   கோயம்புத்தூர் – 641003 ,

   தமிழ்நாடு .

நேர்காணல் நடைபெறும் நாள் :

   03.10.2023 முதல் 05.10.2023 வரையில் மூன்று நாட்கள் காலை 9மணியளவில் நடைபெற இருக்கின்றது. விண்ணப்பிக்கும் பணிகளுக்கு ஏற்ப நேர்காணல் நடைபெறும். எனவே நேர்காணல் நாள் எப்போது என்று தெளிவாக பார்த்துக்கொள்ள வேண்டும். 

நேர்காணலில் தேவையானவை :

   1. கல்வி சான்றிதழ்கள் ( ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் )   

   2. அனுபவ சான்றிதழ் ( ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் )

   3. விண்ணப்படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பி ஜெராக்ஸ்கள் அனைத்திலும் சுயகையொப்பம் இட்டு விண்ணப்பத்தினை நேர்காணலுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.  

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *