காவல்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த திட்டம் தீட்டி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் சோதனை சாவடி என்ற பகுதியில் ஒரு குழந்தையைக் வடமாநில இளைஞர் கடத்த முயன்றதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு என்ற அந்த பகுதி மக்கள் அனைவரும் சிக்கிய இளைஞரை தாக்கினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதே போல் திண்டுக்கல், கொம்பேறிபட்டி பகுதியிலும் ஒரு இளைஞன் குழந்தையை கடத்த முயன்றதாகவும், மக்கள் அனைவரும் அவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வடமாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தகவலை பரப்பிய ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, சென்னை அம்பத்தூர் பகுதியில் முகமூடி அணிந்த இருவர் குழந்தைகளை கடத்துவதாக பெண், ஆண் பேசும் ஆடியோ வெளியான நிலையில், தவறான வதந்திகள் பரப்பியதாக அம்பத்தூரைச் சேர்ந்த 35 வயது பெண் கைது செய்யப்பட்டார். இதுமாதிரியான பொய்யான தகவல்களை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.