முதல்வர் முக ஸ்டாலின்
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் 10ம் வகுப்புக்கான தேர்வு ஆரம்பமாகிறது. நாளை தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனித்தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும் இந்த தேர்வுக்காக கிட்டத்தட்ட 4,107 தேர்வு மையங்கள் போடப்பட்டு, கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே. All the best! நீங்கள் எந்தவொரு பதட்டமும் இன்றி நல்லபடியாக தேர்வை எழுதுங்கள். வினாத்தாள் வந்தவுடன் படிக்க 10 நிமிடம் வழங்கப்படுவது வழக்கம். அதை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்திற்கு சென்றிடுவதை உறுதி செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.