தமிழகத்தில் முக்கிய மாவட்டமான நீலகிரியில் இருக்கும் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. மேலும் கழிப்பறை கட்டிடம் அங்கு இருந்த நிலையில் அதன் அருகே தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக கிட்டத்தட்ட 10 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். அப்போது, ஜேசிபி-யை வைத்து பள்ளம் தோண்டும் போது எதிர்பாராத விதமாக கழிப்பறை கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டு மண் சரிந்தது. அப்போது இந்த விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனே அவர்களை மீட்கும் பணியில் இறங்கினார்கள். அந்த பணியில் ஈடுபட்டபோது ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து உதகை காந்திநகரை சேர்ந்த சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.