பொதுவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கின்றனர். அதன்படி இந்நிறுவனம் மாதத்திற்கு இரண்டு முறை விலையை தீர்மானம் செய்யும். இந்நிலையில் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வணிக சிலிண்டரின் விலை தான் தற்போது அதிகரித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
நேற்று வரை சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஒன்று 1924 ரூபாய் 50 பைசா என விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 12 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டு 1,937 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சற்று அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமின்றி 918 ரூபாய் 50 பைசாவுக்கு விற்கப்பட்டு வருகிறது.