இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய அங்கமாக இருந்து வருவது மின்சாரம் தான். அப்பேற்பட்ட மின்சாரத்தின் தேவை மக்களுக்கு அதிகம் தேவைப்படுவதால், தமிழக மின்வாரிய துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்து வருகின்றன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது வேலை செய்யும் பணியாளர்களுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட கூடாது என்பதற்காக அவர்களை கண்காணிப்பதற்காக மின்வாரிய அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐடி பிரிவு தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மீண்டும் இணைப்பு வழங்குதல், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் இணைப்பை துண்டித்தல், மின்சாரம் அளிக்கும் புகார்கள் உள்ளிட்ட களபணிகளில் ஈடுபடும் பணியாளர்களை கண்காணிப்பதற்கான செல்போன் ஆப் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப்புக்கான சோதனைக்கான, முயற்சிக்கு மின்வாரியத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்து முதலில் 12 வட்ட அலுவலகங்களில் உள்ள மேலாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக செயலியின் ஏபிகே வழங்கப்பட்டுள்ளது.