
கடலுக்கு செல்ல தடை
கடலோர பகுதியில் வாழும் மீனவர்கள் தினசரி கடலுக்குள் சென்று மீன் பிடித்து அதை விற்று வயிற்று பசியை போக்கி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ராமேஸ்வரம் கடல் மீனவர்கள் இலங்கை எல்லைக்கு சென்று மீன் பிடிப்பதாக கூறி பலமுறை இலங்கை அரசு மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து கடந்த வாரம் கூட ராமேஸ்வரம் மீனவ சங்கங்கள் போராட்டம் நடத்தியதால், கடந்த (பிப்.25)ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து நேற்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் பிரதமர் மோடி, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் வர இருப்பதால் பல முன்னேற்பாடுகளை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி கடலோர பகுதியில் இருக்கும் பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்றும் (பிப்.27) நாளையும் (பிப்.28) மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளனர்.