மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்து மூன்று வருடங்கள் நிறைவு செய்ததை தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் கோரிக்கைகளை விரைந்து நடவடிக்கை எடுக்க மக்களுடன் முதல்வர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் படி முதல் கட்டமாக மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மதம் 15 ஆம் தேதி முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டமானது கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிட தடை – கோவில் நிர்வாகம் அறிவிப்பு !

இந்த திட்டத்தின் அடிப்படையில் 5 மாதங்களில் பெற்ற 8.74 லட்சம் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 12,525 கிராமங்களில் 2500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *