தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு அரசு :
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த கண்காணிப்பு அலுவலர்கள் பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், அத்துடன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கண்காணிப்பாளர்கள் :
தற்போது வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளராக உள்ள பிரஜேந்திர நவ்னிட் ஐஏஎஸ், திண்டுக்கல் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் முதன்மைச் செயலாளர் சி.விஜயராஜ் குமார் ஐஏஎஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமனம்.
இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் எஸ். மதுமதி ஐ.ஏ.எஸ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமனம்.
மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயலாளர் வீரராகவ ராவ் ஐஏஎஸ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ், சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் நல இயக்குநர் எம்.ஆசியா மரியம் ஐஏஎஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குக் கண்காணிப்பு அலுவலராக நியமனம்.
தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.என். மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !
அந்த வகையில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான எம். வள்ளலார் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் இ.சுந்தரவல்லி ஐஏஎஸ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.