தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம் ! கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் !

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 முதல் பொது கலந்தய்வு துவக்கம். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்க்கான விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் ஆர்வமுடன் தங்கள் விரும்பும் துறையை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு வரும் ஜூன் பத்தாம் தேதி பொது கலந்தாய்வு நடத்தப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர்கள் உயர்கல்விகளில் சேர விண்ணப்பித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் பதிவு செய்வதற்கான தொடக்க நாள் : 06.05.2024

விண்ணப்பம் பதிவு செய்வதற்கான இறுதி நாள் : 20.05.2024

அத்துடன் மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் தேதி : 24.05.2024.

சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாட்கள் ( மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, பதுகாப்பு படை வீரர்கள் ) : 28.05.2024 மற்றும் 30.05.2024.

சென்னையில் பேருந்து – மெட்ரோ & புறநகர் ரயில் பயணத்திற்கு ஒரே டிக்கெட் – எப்போது அமல் தெரியுமா?

முதல் பொது கலந்தாய்வு நாட்கள் : 10.06.2024 மற்றும் 15.06.2024

இரண்டாம் பொது கலந்தாய்வு நாட்கள் : 24.06.2024 மற்றும் 29.06.2204

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கும் நாள் : 03.07.2024.

ஆன்லைனில் விண்ணப்பிக்க – https://www.tngasa.in/

இதன் அடிப்படையில் பொது கலந்தாய்வு 10.06.2024 முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *