தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை - வாடிக்கையாளர்கள் அதிருப்தி .. முதல்வரை நாடிய ஆபரேட்டர்கள்!தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை - வாடிக்கையாளர்கள் அதிருப்தி .. முதல்வரை நாடிய ஆபரேட்டர்கள்!

tn government தமிழகத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை: தமிழகத்தில் அரசு கேபிள் டிவி மூலமாக தான் மக்களுக்கு ஒளிபரப்பி வருகிறது. ஆனால் திடீரென நேற்று முன்தினம் காலை 5:00 மணி முதல், கேபிள் டிவி  ஒளிபரப்பில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து முதல்வருக்கு  தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக  அரசு கேபிள் டிவியை நம்பி கிட்டத்தட்ட  10 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5:00 மணி முதல், கேபிள் டிவி  ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களால் பதில் கூற முடியவில்லை. மேலும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, சாப்ட்வேர் பிரச்சனை சில தினங்களில் சரியாகிவிடும் என்கின்றனர். ஆனால் அதே போல் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்டது. இப்பவும் அதே போல் தான் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் டி.டி.எச் க்கு மாறி வருகின்றனர். எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுகிறோம் என்று தெரிவித்துள்ளது. 

T20 உலக கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் செம்ம ட்விஸ்ட் – இந்தியாவுக்கு  அடுத்தடுத்த போட்டிகளில் ஆப்பு கன்பார்ம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *