
Dearness Allowance Hike 2024 அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: தமிழக அரசில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதன்படி மாநில அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை அகவிலைப்படி உயர்த்திய தொகையை செலுத்தாமல் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது அனைத்து அரசு பணியாளர்களுக்கு பொருந்தாது. 2016 முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. tamilnadu government news – DA news – mk stalin
பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை… சூடுபிடிக்க வாதாடிய எக்கோ நிறுவனம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு