தேர்வர்களே.., இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்ப முதல இத பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!தேர்வர்களே.., இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? அப்ப முதல இத பண்ணுங்க.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

TNPSC தேர்வாணையம் , அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. சமீபத்தில் குரூப் 2 தேர்வுக்கான  ரிசல்ட் வெளியான நிலையில், 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறது. இதனால் தேர்வர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வர்கள் பல கோச்சிங் சென்டர்களில் படித்து வரும் நிலையில்,, தமிழக அரசு முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு துறைகள் மற்றும் பொது துறை வங்கிகளில் வேலை பார்க்க விரும்பும் பட்டதாரி தேர்வர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக அரசு இலவச பயிற்சி முகாம் நடத்த முடிவெடுத்துள்ளது. இதில் கலந்து வெற்றி பெற நினைக்கும் பட்டதாரி இளைஞர்கள் வருகிற பிப்ரவரி 12ம் தேதிக்குள் www.cecc.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் தெரிய வேண்டும் என்றால்  044-25954905 / 044-28510537 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.  

மாட்டிகினாரு ஒருத்தரு.., சாக்லேட் திருடி சாப்பிடுவது போல் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்.., கொக்கி போட்டு தூக்கிய காவல்துறை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *