அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023. இந்த பதவிக்கு 8ஆம் வகுப்பு படித்தால் போதுமானது. தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு சேர கல்வி, வயது, அனுபவம், எப்படி விண்ணப்பிப்பது போன்றவை தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023

தமிழக அரசின் கீழ் தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அரூர் ஊராட்சி (Tamil Nadu Rural Development and Panchayat Raj Department – TNRD )இயங்கி வருகின்றது. இங்கு அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளது.

அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளது.

அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

18 முதல் 32 வயது வரை இருக்கும் நபர்கள் தருமபுரி மாவட்ட அரூர் ஊராட்சி துறையில் இருக்கும் கலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ராம்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 ! 50,000 வரை சம்பளம் கிடைக்கும் !

அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை (Level – 1) மாத ஊதியமாக வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் .

22.11 .2023 முதல் 05.12.2023 அன்று மாலை வரை மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். நேரில் சென்றும் கொடுக்கலாம் . வேலை நாட்களில் மட்டும். காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மட்டும். அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023.

ஆணையாளர்

ஊராட்சி ஒன்றியம் ,

தர்மபுரி.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

அதில் கேட்டப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும்.

முழுவதும் பூர்த்தி செய்யப்படாத அல்லது தவறாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

காலதாமதமாக அனுப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

தகுதியுள்ள நபர்களுக்கு நேர்முக தேர்வுக்கு தேதி, இடம் போன்றவை கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *