உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு. தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள இடஒதுக்கீட்டு முறைகள் அடிப்படையில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு :
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டு முறையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை நடைமுறை படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்கு இனி ஒரே போர்டல் தான் – மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.