தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த பத்திற்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் :
அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி தற்போது ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக இருந்த மணிவாசகம் நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் தற்போது சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நீர்வளத் துறை செயலாளராக இருந்த சந்திப் சக்சேனா தற்போது செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!
தற்போது சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு
ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்
Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை
TNPSC குரூப் 2 தேர்வு செப்டம்பர் 2024
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு